September 17, 2015

லண்டனில் அமெரிக்க தூதரகம் முன்பு கொட்டும் மாழையில் தமிழர்கள் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இன்று லண்டனில் அமெரிக்க தூதரகம் முன்பு கொட்டும் மாழையில் இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுருத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 
ஐநா மனித உரிமை பேரவையினால் இன்று அறிக்கை  வெளியிடப்படுள்ள நிலையில்  தமிழினத்தைத் தொடர்ச்சியாக கருவறுத்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா இனவாத அரசை அனைத்துலக நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி லண்டனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக,  நீதிக்கான மாபெரும் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

 (செப்டெம்பர்) 16ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு  24 Grosvenor Square, W1A  2LQ  என்னும் முகவரியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கூடிய தமிழ் மக்களால்  அனைத்துலக நீதி கோரி இப்போராட்டம் நடத்ததினர்.

தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிறீலங்கா இனவாத அரசு மீதான நீதி விசாரணையானது அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு வழிகளிலும்  உலகெங்கும் தமிழர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், சர்வதேசப் பொறிமுறை ஒன்றினூடாகவே விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வடமாகாண சபையிலும் தமிழகத்திலும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நீதி விசாரணையை வலியுறுத்தும் முகமாகவே இந்நீதிக்கான போராட்டம் நடைபெற்றுள்ளது.

அத்துடன் வடமாகானசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கோபி சிவந்தன் அவர்களால் GS Cholan அமெரிக்க தூதுவரிடம் கையளிக்கப்பட்டது 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்






No comments:

Post a Comment