மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னர் துணை ஆயுதக் குழுவொன்றின் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த ஒருவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் பெருமளவு ஆயுதங்கள் கைமாறப்பட்டது பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே, ஆயிரம் வரையான ரி 56 துப்பாக்கிகளும், மேலதிகமாக கைத்துப்பாக்கிகளும் இந்த துணை ஆயுதக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் துணை ஆயுதக் குழுவினருக்கு ஏன் வழங்கப்பட்டன, இவற்றை அவர்கள் எதற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்ற விபரங்களைக் கண்டறியும் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த ஆயுதங்கள், பாதாள உலக குழுக்களிடம் சென்றதா என்பது பற்றிய தகவல்களையும் அவர்கள் திரட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment