August 12, 2015

தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்த உழைக்கும் நேர்மையான அரசியல் ஆய்வாளர்கள் மீதும் கரிபூசும் கூட்டமைப்பு.!(வீடியோ இணைப்பு)

இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பாக புலம்பெயர் தேசத்தில் பரவலான ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பெருகி வரும் நிலையில் தற்சமையம் இவ் ஆதரவு நிலை தாயகத்திலும்
அவர்களுக்கான வெற்றிக்கு உரமாகும் எனும் கருத்து வலுப்பெற்று வருகின்றது . அரசியல் ஆய்வாளராக மற்றும் ஊடகவியாளராக புலம்பெயர் தேசத்தில் நேர்மையாக  தமிழ் மக்களின் அரசியலில் ஆர்வம் செலுத்தி பல ஆய்வுகளை வெளிப்படுத்தி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் தனது பணியை செய்து வரும் நிர்மானுசன் அவர்கள் மீது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெளிநாட்டு பிரிவினர் கரிபூசும் வேலையில் இறங்கி உள்ளனர் .கருத்தை , கருத்தால் வெல்ல முடியாத நிலைமையில் இப்படியான சேறு பூசும் வேலை தாயகத்திலும் நடைபெறுவதை நாம் அண்மைக் காலத்தில் அறிகின்றோம் .
ஊடகவியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிர்மானுசன் அவர்களின் சுதந்திரமான ஊடக ஆய்வுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெளிநாட்டு பிரிவினர் முத்திரை  குத்துவதை  குறியீடு இணைத்தளம் வன்மையாக கண்டிக்கின்றது .தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இப்படியான செயற்பாடு தமிழ் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதாகவே அமைகின்றது .
தேர்தல் தொடர்பாக நிர்மானுசன் அவர்கள் IBC  தொலைகாட்சிக்கு கொடுத்த நேர்காணலை கீழே காணலாம் .

No comments:

Post a Comment