August 22, 2015

குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் இளங்கோவனின் நாகரீகமற்ற பேச்சை கண்டித்து பல்வேறு போராட்டம் நடக்கிறது. அவர் தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் நடிகை குஷ்புவும் பேசுகிறார். வடமாநிலத்தில் இருந்து வந்த அவருக்கு தமிழ் பண்பாடு குறித்து தெரியாது. ஏற்கனவே இதே போல் பேசி மக்களிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டார். குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சனையால் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொழிலாளர்கள் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். சேஷசமுத்திரம் கலவரத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களை சிறப்பு முகாம் என்ற போர்வையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.

சிறப்பு முகாம்களை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி வருகிற 24–ந்தேதி திருச்சியில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment