August 16, 2015

இறுதி நேர அழைப்பு! அணிதிரட்ட தயாராக புலம்பெயர் உறவுகளிற்கு அழைப்பு!

அடுத்து வரும் சிலநாட்களிற்கு சொந்தபந்தங்கள்,அயலவர்கள்,நண்பர்கள் என அனைவரையும் தொலைபேசி வழியூடாவோ,சமூக ஊடகங்களின்
ஊடாகவோ விழிப்பூட்டி சைக்கிளிற்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.புலம்பெயர் உறவுகளிற்கு அவர் விடுத்துள்ள பகிரங்க அழைப்பினில்:என்றும் அன்பிற்குரிய புலம்பெயர் உறவுகளே
வணக்கம்.
மாற்றமொன்றிற்கான நீண்டதொரு முயற்சியின் இறுதிநாட்களில் உங்களுடன் பேசுகின்றோம்.முள்ளிவாய்க்கால் இறுதி கணங்களினில் தூக்கமின்றி புலம்பெயர் தேசங்களின் வீதிகளெங்கும் அலைந்து திரிந்த உங்களின் அர்ப்பணிப்பின் பெறுமதி சொல்லிலடங்காதது.இன்றும் விழுந்துவிடாத வீரம் தங்கி நிற்பது தங்களாலேயே என்பதும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அனைத்தும் இழந்து நட்டாற்றினில் விடப்பட்ட எம்மக்களினை மீண்டெழுந்து வாழ வைத்ததும் நீங்கள் என்பது வெறும் புகழ்ச்சியல்ல.கடந்த காலங்களினில் நீங்கள் எம்மோடு கைகோர்த்து நடந்ததுடன் அது இன்று வரை தொடர்கின்றது.எங்களிற்காக உங்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து தோள்கொடுத்துவருவதும் அனைவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment