August 16, 2015

தேர்தலை முன்னிட்டு வவுனியா தனியார் கல்வி நிலைங்களுக்கும் விடுமுறை!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா தனியார் கல்வி நிலைங்களுக்கும் விடுமுறை வழங்குக எதிர்வரும் 17 ஆம் திகதி
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு நாளை ஞாயிறு தொடக்கம் இரு தினங்களுக்கு அரச மற்றும் தனியார் துறையினர் அனைவருக்கும் பகுதி நேர மற்றும் முழு நேர விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் கல்வி நிலையங்களும் இவ்விரு நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். தேர்தல் நேரம் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்பதுடன் பல மாணவர்களின் பெற்றோர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment