August 22, 2015

யாழ்.மாவட்டத்தினில் கூட்டமைப்பினில் போனஸ் ஆசனம்! உச்ச சண்டை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினில் யாழ்.மாவட்டத்தினில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட அருந்தவபாலனிற்கு தேசியப்பட்டியல் ஆசனமொன்றை வழங்க கோரி ஆலயங்களினில் இன்று வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனை வெல்ல வைக்க முறைகேடுகள் நடத்தப்பட்டு தென்மராட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அருந்தவபாலன் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையினில் அதனால் சீற்றமுற்றுள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் அப்புகதி பொது அமைப்புக்கள் கூட்டமைப்பு தலைமைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.   இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 

இதன்போது, தேசிய பட்டியல் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினரில் தமது கட்சிக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகலாதலிங்கம் ஆகியோரிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்குமாறு அவர்கள்; கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment