தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்கும் இந்த நாடு உரித்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சம்பூரில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்த நாட்டில் இன, மத பேதம் எதுவுமின்றி அனைத்து மக்களும் சம உரிமையோடு கையாளப்படுவார்கள். தென்னிலங்கையில் வாழ்கின்றவர்களை விட வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்கள் யுத்தத்தின் காரணமாக இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பதையும் நான் நன்கு அறிவேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment