August 8, 2015

சமூக ஊடகங்களால் தேர்தல் திணைக்களத்திற்கு நெருக்கடி!

சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரங்களைத் தடுக்க வழியின்றி தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும்.
ஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளை தேர்தல் திணைக்களத்திளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக, டுவிற்றர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணையவழிப் பரப்புரைகள் வெற்றியைத் தீர்மானிக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்று நம்பவில்லை என்று தேர்தல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment