August 5, 2015

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!களத்தில் கஜேந்திரகுமார்!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தமிழ் முழக்கம் செய்த மறைந்த தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் பேரன் என்ற பாரம்பரியத்துடன், சிங்களத்தின் தலைநகரிலே இருந்து தமிழ் மக்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக் குரல் கொடுத்ததன் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டு, தலைவர் பிரபாகரனால் மாமனிதராக கௌரவிக்கப்பட்ட குமார் பொன்னம்பல் அவர்களின் மகன் என்ற பெருமையுடனும், தமிழீழ விடுதலைப் புலிகளால் 2004 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டு நாடாளுமன்றில் விடுதலைப் புலிகளின் ஜனநாயக்குரலாக ஒலித்தவர் என்ற உரிமையுடனும் உங்கள் முன் தேர்தல் அரங்கில் களமிறங்கியுள்ளார்.
கஜேந்திர குமார் பொன்னம்பலம்
அவர் நாடாளுமன்றத்தில் இருந்த போது என்ன செய்தார் என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
• இவர் மகிந்த ராஜபக்சவுடன் கிரிகட் விளையாடியும், தேநீர் விருந்துகளில் கலந்து கொண்டும். கோத்தபாயவுடன் இரகசிய உறவுகளை பேணியும் ஆட்சியாளர்களுடன் நல்லுறவை பேணவில்லை என்பது உண்மைதான்.
• ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதலாவது முன் வரைவை ஏற்றுக் கொண்டு இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்ற முயலவில்லை என்பதும் உண்மைதான்.
• 34 வருடங்களாக தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மக்களின் ஆணை பெறாமலே கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யவில்லை என்பது உண்மைதான்
• மார்ச் மாதம் வெளிவர இருந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதை வரவேற்று தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பை சிதறடித்து இலங்கை அரசைதிருத்திப்படுத்தி படுத்த வில்லை என்பதும் உண்மை தான்.
இப்படியான தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் கஜேந்திர குமார் அவர்கள் ஈடுபட்டிருந்தால் இப்படியான குற்றங்களை முன்பும் செய்திருந்தால் இனி மேலும் செய்வார்.
ஆனால் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஜனநாயகக் குரலாக அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார். பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்தியாவில் ஓடி ஒழிந்துக் கொண்ட போது அவர் உயிர் அச்சுறுத்தலின் மத்தியிலும் துணிவுடன் குரல் கொடுத்தார்.
அவர் நாடாளுமன்றப் பதவி இழந்த பின்பும் ஓய்ந்து விடவில்லை. உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழ் மக்களுக்காக நேர்மையுடனும், எந்த வித விட்டுக் கொடுப்புக்களும் இன்றி தொடர்ந்து போராடி வருகின்றார்.
2014 இல் அமெரிக்காவில், ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட முதலாவது முன் வரைவை ஏற்றுக் கொள்ளும் படி சுமந்திரன் வலியுறுத்திய போதும் கஜேந்திரகுமார் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களுடனும் இணைந்து அதை முன்றாவது முன் வரைபு வரை கொண்டு சென்று சர்வதேச விசாரணை என்ற மட்டத்திற்கு உயர்த்திய சாதனையை மேற் கொண்டவர்.

அவர் ஒரு தமிழனாக, நேர்மையான தமிழ் உணர்வாளனாக, எந்தவித விட்டுக் கொடுப்புக்களுமின்றி நேர்மையாகவும், துணிவுடனும் செயற்பட்டு வருகின்றார். எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்து கஜேந்திரகுமாரையும் அவர் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களையும் தெரிவு செய்து எமது உரிமைப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம்.

No comments:

Post a Comment