ஹட்டன் நகர பகுதியில் தொலைத்தொடர்பு நிலையத்தில் 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹட்டன் நகர பகுதியில் தொலைத்தொடர்பு நிலையத்தில் சில பொருட்களை கொள்வனவு செய்ததன் பின், 1,000 ரூபாய் நாணயத்தாளை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார்கள்.
அதன்பின் விற்பனையாளர் நாணயத்தாள் போலியானது என இணங்கண்ட பின் சந்தேக நபர்களை தடுத்து வைத்து ஹட்டன் பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்மந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வருகை தந்து சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்ததோடு வழங்கிய தாளையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நாணயத்தாள் போலி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த கிழமையில் கொழும்பில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து மேற்படி நாணயத்தாள் கிடைக்கபெற்றதாகவும் இந்த நாணயதாள் போலி என தங்களுக்கு தெரியாததெனவும் குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment