August 7, 2015

இரண்டு பிரதான தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளை பிளவுபடுத்துகின்றனர்:! ஈழத் தமிழர் செயலகம்!

நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குளை பிளவுபடுத்தும்
செயற்பாட்டில் ஈடுபடுகின்றன என ஈழத் தமிழர் செயலகத்தின் திருகோணமலை கிளையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் திருகோணமலை உப்புவெளி அப்சரா விடுதியில் ஈழத் தமிழர் செயலகத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஈழத் தமிழர் செயலகத்தின் திருகோணமலை செயற்பாட்டாளர்கள் பிலிப் முருகையா, பிலிபையா ஜோன்சன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இலங்கை தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன தமிழ் மக்களின் தீர்வு விடயமாக தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்விரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இவ்விரு கட்சிகளும் ஒரு பொது விவாதத்திற்கு மக்கள் முன்வந்து அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை பகிர வேண்டும்.பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 11 தினங்கள் உள்ளன. எதிர்வரும் 12ம் திகதி இவ்விரு கட்சிகளுக்கும் நாம் ஒரு பொது விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். அதன்போது கட்சியின் தலைவர்கள் மக்களது கருத்துக்களுக்கு சரியான விளக்கம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment