மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழங்கு விசாரனைகள் இன்று புதன் கிழமை(26) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரனைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இதன் போது குறித்த வழக்கு விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது காணாமல் போன உறவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது.
விசேடமாக விசாரனைகளின் போது கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்படுவதற்கான மாதிரிகளை தயாரித்தல், அதனை சரியான முறையில் கைமாற்றுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், அதன் பரிசோதனைகளை சார்வதேச ரீதியிலே அங்கிகரிக்கப்பட்ட தடயவியல்,தொல்லியல் துறையினர் மற்றும் தடயவியல்,மானுடவியல் தொடர்பான சிறப்பு நிபுனத்துவம் பெற்றவர்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளினால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஏற்கனவே குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அவர்களினால் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்பட்ட பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது.
ஆனால் அவ்வாறான ஒரு பல்கலைக்கழகம் அமெரிக்காவில் இல்லை என்பது தொடர்பில் சட்டத்தரணிகளினால் ஆட்சேபனை மன்றில் எழுப்பப்பட்டது.
இதiனைத்தொடர்ந்து விசாரனைகளை மேற்கொண் நீதவான் குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்தில் கிணறு இருப்பதாக ஏற்கனவே சட்டத்தரணிகளினால் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த கிணற்றினை இன்று புதன் கிழமை(26) மாலை அடையாளப்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.
-மன்னார் பொலிஸ் அத்தியட்சகர்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,நில அளவியல் திணைக்களம் ஆகியோருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
-அதன் அடிப்படையில் இன்று புதன் கிழமை(26) மாலை 3.30 மணியளவில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி காணப்பட்ட இடத்திற்கு மன்னார் நீதவான் விஜயம் செய்தார்.
இதன் போது சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோறும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோறும் சென்றிருந்தனர்.
இதன் போது அங்கு உடை மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு நடுவே சட்டத்தரணிகளினால் கூறப்பட்டும் கிணறு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment