August 13, 2015

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ் பேசும் மக்­களின் நல­னுக்­காக அணிதிரண்டு வாக்களியுங்கள்!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ் பேசும் மக்­களின் நல­னுக்­காக அணிதிரண்டு சக­லரும்வாக்­க­ளிக்க வேண்டும். யாருக்கு வாக்­க­ளிப் ­பது என்ற உங்­க­ளது தீர்­மா­னத்தில் நான் எந்­தவொரு செல்­வாக்­கையோ அல்­லது தலை­யீட்­டி­னையோ செய்­யப்­போ­வ­தில்லை.

தேர்­தலில் எந்­த­வொரு கட்­சிக்கும் பக்­கச்­சார்­பற்ற நடு­நிலைத் தன்மை என்ற எனது நிலைப்­பாட்டில் நான் உறு­தி­யாக உள்ளேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.
இம்­முறை கட்­சிக்கு அப்பால் கொள்கை நிலைகொண்ட, நேர்­மை­யான, பற்­று­றுதி கொண்ட, விலைபோகாத, தூரநோக்குப் பார்வை கொண்ட, கரி­சனை உடைய பிர­தி­நி­தி­களை நீங்கள் அடை­யாளம் காணவேண் டும்.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில்தேர்ந்­தெ­டுக்­கப்­படும் அனைத்து வேட்­பா­ளர்­களும் மக்கள் நலனே முதன்­மை­யா­னது என்ற இலக்­கினால் ஒன்­று­சேர்ந்து ஒரு குடையின் கீழ் ஒற்­று­மை­யாக வடக்கு, கிழக்கு மக்­களின் நலன் கருதி செய­லாற்ற முன்­வ­ர­வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யு­ளளார்.
பாரா­ளு­மன்ற தேர்­தலை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தேர்­த­லுக்கு  இன்­னமும் சில நாட்­களே உள்ள நிலையில் யாருக்கு வாக்­க­ளிப்­பது, யாரை தெரிவு செய்தால் உங்­க­ளையும் ஒட்­டு­மொத்த தமிழ் சமூ­கத்­தையும் அவர்கள் வாழ­வைப்­பார்கள் என்­பது குறித்து நீங்கள் ஓர் தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருப்பீர்க்ள் என நம்­பு­கின்றேன். உங்­க­ளது தீர்­மா­னத்தில் நான் எந்­த­வொரு செல்­வாக்­கி­னையோ அல்­லது தலை­யிட்­டி­னையோ செய்­யப்­போ­வ­தில்லை. இம்­முறை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சிக்கும் பக்கச் சார்­பற்ற நடு­நிலைத் தன்மை என்ற எனது நிலைப்­பாட்டில் தொடர்ந்தும் உறு­தி­யா­க­வுள்ளேன்.
ஆரோக்­கி­ய­மான அக­மு­ரண்­பா­டுகள் அவ­சி­ய­மா­ன­வை­யா­யி­னும்­கூட, ஒரே கட்­சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்­கைக்­காகத் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் ஒரு­வரை ஒருவர் தூற்றிக் கொண்டும், வசை­பா­டிக்­கொண்டும், அர­சியல் நாக­ரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்­ற­வ­ருக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­மை­யினைக் காணும் போது பக்கச் சார்­பற்ற நடு­நிலைத் தன்மை என்ற எனது முடிவு சரி­யா­னது என்றே நான் கரு­து­கின்றேன்.
வட­மா­காண சபைத் தேர்தலை முன்­னிட்டு 2013 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் வெ ளியிட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்ட வாக்­கு­று­தி­களை பலத்த சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் நிறை­வேற்­று­வ­தற்­காக நான் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட்டேன், செயற்­பட்டும் வரு­கிறேன். இதனைத் தொடர்ந்தும் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க எதிர்­கா­லத்தில் எனது மக்­களின் பாரிய ஒத்­து­ழைப்பும் பங்­க­ளிப்பும் மென்­மேலும் அவ­சியம். மக்கள் நலனை முதன்­மைப்­ப­டுத்­திய எனது வேலைத்­திட்­டங்­க­ளையும், அது சார்ந்த உள்­நாட்டு வெளிநாட்டுச் சந்­திப்­புக்­க­ளையும் வட மாகாண சபைத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கின்றேன்.
தமிழ் மக்­களின் அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுக்கும் மக்கள் நலன்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுப்­பது எனது பொறுப்­பென உணர்­கின்றேன். அந்தப் பொறுப்பைப் பற்­று­று­தி­யுடன் பற்றிக் கொள்­ளவே நான் விரும்­பு­கின்றேன். இதற்­காக நான் எத்­த­கைய அர்ப்­ப­ணிப்­பையும் செய்யத் தயா­ராக இருக்­கின்றேன்.
போரின் போது மேற்­கொள்­ளப்­பட்ட இன­அ­ழிப்பு எமது இனத்தின் சமூக, பொரு­ளா­தார, பண்­பாட்டு கட்­ட­மைப்­பு­களை சிதைத்­துள்­ளது. இவற்றை நாங்கள் மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். இதற்கு அமை­வாக ஆக்­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்­களைப் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் நேர­டி­யாக மேற்­கொள்ளும் வாய்ப்பு நான் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற பின் கிடைத்­தது. அதனை, மிக ஆழ­மாக ஆராய்ந்து பார்த்த பின்பே எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தோ்தலில் நடு­நிலை வகிப்­ப­தென்ற முடி­வை­யெ­டுத்தேன்.
இது சம்­பந்­த­மாக அண்­மையில் நான் வெளியிட்­ட­செய்தி பல­வி­த­மான மாறு­பட்ட கருத்­துக்­களை முன் கொண்டு வந்­துள்­ள­தாக அவ­தா­னிக்­கின்றேன். எனினும் அது பலரைச் சிந்­திக்க வைத்­துள்­ளமை புலப்­ப­டு­கி­றது. என்னைப் பொறுத்த வரையில் நான் தற்போது அர­சி­யலில் இருக்கும் அதே­நேரம், அர­சி­ய­லுக்கு வர முன்­பி­ருந்தே சமூக சேவை­யிலும் சமூக மறு­ம­லர்ச்­சி­யிலுந் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்­துள்ளேன் என்­பதை அறி­யத்­த­ர­வேண்­டி­யுள்­ளது. எம் மக்­களின் சேவை­யிலும் மறு­ம­லர்ச்­சி­யிலுந் தொடர்ந்து ஈடு­பட அர­சியல் எனக்கு ஒரு கரு­வியே தவிர எனது முழு நேரத் தொழில் அல்ல.
கடந்த 22 மாதங்­களில் நான் என் மக்­க­ளிடம் இருந்து தெரிந்து கொண்ட பாடங்கள் சில காணப்படுகின்றன.
ஒன்று – அர­சி­யல்­வா­திகள் தேர்தல் காலத்தில் பேசு­ப­வற்றை தேர்தல் முடிந்­ததும் காற்றில் பறக்க விட்டு விடு­கின்­றார்கள் என்­பதாகும். எனவே இதனால் மக்கள் மனக் கிளர்ச்­சியும் தளர்ச்­சியும் அடை­கின்­றார்கள்.
இரண்டாவதாக தேர்தல் முடிந்­ததும் மக்­க­ளிடம் இருந்து அர­சி­யல்­வா­திகள் விலகிச் செல்­கின்­றார்கள். அவர்­களின் பிரச்­சினை­களை, ஏக்­கங்­களை, தேவை­களைப் புறக்­க­ணிக்­கின்­றார்கள். தமக்கும் தமக்கு அண்­மித்­த­வர்­க­ளுக்கும் மட்டும் சலு­கைகளை செய்­கின்­றார்கள், கரி­ச­னை­காட்­டு­கின்­றார்கள், உத­விகள் புரி­கின்­றார்கள்,என்­பதாகும்.
மூன்றாவதாக கொடுத்த தேர்தல் விஞ்­ஞா­பன வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறாக சுய­ந­லத்­துடன் நடக்க எத்­த­னிக்­கின்­றார்கள். முக்­கி­ய­மாகத் தென்னிலங்கை அர­சி­யல்­வா­தி­க­ளுடன் சேர்ந்து நடக்க வேண்டும் இல்­லையேல் விமோ­சனம் இல்லை என்ற எண்­ணத்தில், உணர்ச்­சி­யுடன் தமிழ் மக்­க­ளி­டையே தேர்தல் மேடை­களில் பேசிய வச­னங்­களை மறந்து, தென்னிலங்கையரின் மனங் கோணாமல் நடந்து கொள்ள எத்­த­னிக்­கின்­றார்கள். அவ்­வாறு செய்­வ­தானால் அதை முன்­கூட்­டியே தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும் என்­பதை மக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள்.
இவ்­வாறு பல­தையும் மக்கள் கூறு­வதை நான் கேட்­டுள்ளேன். இது­பற்றி அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கேட்டால் தமது கட்­சியின் பெய­ரைக்­கூ­றி­அதில் குளிர்­காயப் பார்க்­கின்­றார்கள்.இதனால்த் தான் நான் கட்­சிக்கு அப்பால், கொள்கை நிலை கொண்ட நேர்­மை­யான, பற்­று­றுதி கொண்ட, விலை­போ­காத, தூர­நோக்குப் பார்வை கொண்ட, கரி­ச­னை­யு­டைய பிர­தி­நி­தி­களை அடை­யாளம் காணுங்கள் என்றேன்.
எனினும் நான் என் முன்­னைய செய்­தியில் இன்­னொன்றைக் கூறி­ய­தையும் எம் மக்கள் மறக்கக் கூடாது. நாம் தேர்ந்­தெ­டுப்­ப­வர்கள் தமிழ் மக்­களின் தனித்­து­வத்­தையும் அவர்­களின் சுய­நிர்­ண­ய­உ­ரி­மை­யை­யும்­உ­று­திப்­ப­டுத்தி,எம்­மக்­க­ளின்­உ­ரி­மை­க­ளையும் அவர்­க­ளுக்­கான நீதி­யையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்றும் கூறி­யி­ருந்தேன். போட்­டி­யிடும் பல கட்­சிகள் எமது மக்­களின் தனித்­து­வத்­தை­யும் சு­ய­நிர்­ண­ய ­உ­ரி­மை­க­ளை­யும் ­ம­தி­யா­த ­வ­கை­யில்த்­தான் ­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களைத் தயா­ரித்­துள்­ளார்கள்.
அக் கட்­சி­களுள் தரம் மிக்­க­வர்கள் இருந்தால்க் கூட (நான் இருக்­கின்­றார்கள் என்று கூற­வில்லை) அவர்­களின் தாற்­ப­ரியம் வேறு என்­பதை நாங்கள் மனதில் நிலை­நி­றுத்த வேண்டும். அவர்­க­ளால்­எ­ம­து­வ­டக்­கு­கி­ழக்­கு­வாழ்­மக்­கள்­நி­ரந்­த­ர­மா­ன­நன்­மை­க­ளைப்­பெற முடி­யாது என்­பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்­டி­ய­தில்லை. மேலும் தாயகம், தனித்­துவம், தமிழர் சுய­நிர்­ணயம் போன்ற கருத்­துக்­களை 2009ம் ஆண்டு மே மாதந் தொடங்­கி­யா­வது இக்­கட்­சிகள் உல­கிற்குப் பறை­சாற்றி வந்­தி­ருக்க வேண்டும். காளான்கள் காரி­ய­வா­திகள் ஆக முடியும் ஆனால் காவ­லர்கள் ஆக முடி­யாது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின் வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் ஒரு சிறந்த அப்­ப­ளுக்­கற்ற அர­சியல் கலா­சா­ரத்தைக் கட்டி எழுப்ப வேண்­டிய கடப்­பாடு எம் எல்­லோ­ருக்கும் எழுந்­துள்­ளது. தெற்கில் பூத­வ­டிவம் பெறப்­பார்க்கும் இன­வெ­றுப்­பு­ட­னான அர­சியல் சிந்­த­னை­களை நாம் தடுத்து நிறுத்த முன்­வ­ர­வேண்டும்.
“எம்­மு­டன்­கை­கோர்த்­து­ வ­ரச்­ சம்­ம­தித்­தி­ருக்­கும் ­மேற்­கத்­தை­ய­ நா­டு­க­ளு­ட­னான உற­வை நாம் பலப்­ப­டுத்­த­வேண்டும். இவ்­வா­று­ செய்­வ­தால்­ எ­மக்­கொ­ரு­ நி­ரந்­தர அர­சியல் தீர்வை நாங்கள் பெற வழி அமைக்­கலாம். இதை மனதில் வைத்துத் தான் நாம்­ தே­ரந்­தெ­டுக்­கும்­ பி­ர­தி­நி­தி­க­ளின் ­தரம்,தகைமை,தகு­தி ­எவ்­வா­று­ அ­மைய வேண்டும் என்று மக்­களை நோக்­கிய எனது முன்­னைய கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தேன். அதை விட மத்­தியில் உள்ளோர், நல்­லாட்­சிக்­கா­னதும், நீதி, சமத்­துவம் போன்ற கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லா­ன­து­மான ஒரு ஆட்­சியை அமைக்க முன்­வ­ர­வேண்­டும்­என்­று­கேட்­டி­ருந்தேன்.அத்­து­டன்­எ­ம­து­சர்­வ­தே­ச­ப­ரி­மாற்­றங்கள் எமக்கு நன்மை அளிப்­ப­ன­வாக அமைய வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தேன்.
தேர்தல் நெருங்கி விட்­டி­ருக்கும் இந்த நேரத்தில் எனது இனிய சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கும் இளை­ஞர்கள் யுவ­தி­க­ளுக்கும் நான் ஒன்று கூறக் கட­மைப்­பட்­டுள்ளேன். தேர்தல் விரைவில் முடிந்து விடும். பழைய வாழ்க்கை மீண்டும் திரும்பி விடும். ஆனால் உங்கள் இனி­வரும் வாழ்க்­கையில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்­டு­மா­னால்­ உங்­க­ளுக்­கா­ன ­கட்­சியை நீங்­கள் ­தேர்ந்­தெ­டுத்­தால் ­போ­தாது. அக்­கட்­சி­யில்­போட்­டி­யி­டும்­ தி­ற­மா­ன­ வேட்­பா­ளர்­க­ளை­ அ­டை­யா­ளம் ­கண்டால் போதாது. நீங்கள் அனை­வரும் திரண்­டெ­ழுந்து சென்று ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்­க­ளிப்­பது மிக முக்­கியம்.
வீட்டில் முடங்கிக் கிடக்­கா­தீர்கள். உங்கள் பொன்­னான வாக்­கு­களை அன்று காலை­யே­ வாக்­குச்­ சா­வ­டி­க­ளுக்கு சென்று அளி­யுங்கள். அது மட்­டுமே உங்­க­ளுக்­குள்ள ஒரே­யொரு திட­மான ஜன­நா­யக உரித்தாகும். நீங்கள் வாக்­க­ளிக்­காது விட்டால் முன்னர் 25 வாக்­கு­க­ளுடன் பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்­களைப் போல்­கு­றைந்­த­வாக்­கு­க­ளு­டன்­கு­றை­யுள்­ள­வேட்­பா­ளர்­கள்­உங்­கள்­கு­றை­கேட்கும் பாரா­ளு­மன்­ற­அங்­கத்­த­வர்­கள்­ஆ­கி­வி­டு­வார்கள்.நீங்கள் வாக்­கு­களை அளிக்காவிடின் வேறு வழி­களில் உங்கள் வாக்­கு­களைப் பாவிக்க சில கூட்­டங்கள் தயார் நிலையில் இருக்­கக்­கூடும். அவ்­வா­றா­ன­வர்­களின் தவ­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடம் அளிக்­கா­தீர்கள்.
உங்­க­ளது கட­மையை செய்­யாது போனால் அது உங்­க­ளுக்­கு­மாத்­தி­ர­மல்ல ஒட்­டு­மொத்த தமி­ழி­னத்­திற்கும் கேடு­த­ரு­வதாய் அமைந்து விடும் என நான் அஞ்­சு­கின்றேன்.தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தென்ற உங்­க­ளது ஜன­நா­யகக் கட­மை­யினை நிறை­வேற்­ற­முன்­வ­ரு­வ­தோடு தமிழ் பேசும்­மக்­க­ளின்­ந­ல­னுக்­காய்­அ­ணி­தி­ரண்டு சென்று வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன்.
இம் மாதம் 17 ஆம் திகதி் காலையில் எந்தக் கட்­சிக்கு நீங்கள் வாக்­க­ளிக்கப் போகின்­றீர்கள் என்­பதை முதலில் மனதில் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­ளுங்கள்.அக்­கட்­சி­எ­ம­து­த­னித்­து­வத்­தை­யும்­சு­ய­நிர்­ண­யத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் கட்­சி­யாக இருக்க வேண்டும். முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லத்தின் பின்னும் தாயகம்,தனித்­துவம்,தமிழர் சுய­நிர்­ணய உரிமை என்ற கோட்­பாட்டில் உறு­தி­யாக இருந்து வரு­கின்ற கட்­சி­யாக இருக்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட இன­அ­ழிப்­புக்கு நீதி­தே­டு­வ­தற்குப் பின்­னிற்­காத கட்­சி­யாக, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை என்ற விட­யத்தில் உறு­தி­யுடன் உள்ள கட்­சி­யா­கத்­தி­க­ழ­வேண்டும். தமிழ் மக்­களின் கௌரவம், சமத்­துவம், பாது­காப்பு போன்ற விட­யங்­களில் சம­ரசம் செய்­யாத கட்­சி­யாக இருக்க வேண்டும்.
போருக்குப் பின்­ன­ரான இந்தச் சூழலில், செயற்த்­திறன் மிக்க புன­ருத்­தா­ரண பணி­களை முன்­னெ­டுக்­கின்ற கட்­சி­யாக இருக்க வேண்டும். காணமல் போகச் செய்­யப்­பட்­டோ­ருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காகவும், அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற கட்சியாக இருக்க வேண்டும்.
சரணா கதியடையாமல், எமது தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன். அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில்உறுதியுடைய,மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய, தூரநோக்குப் பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம் கொண்ட வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அவர்களின் இலக்கங்களை மனதில் பதிந்து வைத்திருங்கள்.
அன்றைய தினம் காலை ஏழு மணிக்கே தேர்தல் களம் செல்லுங்கள். தவறாது வாக்களியுங்கள். வடகிழக்கு மாகாணங்களில்த்தான் மிகச்சிறந்த வாக்காளர் பங்குபற்றல்  நடைபெற்றதென்ற நற் செய்திக்கு வலுவூட்டுங்கள்.வடகிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும்அனைத்து வேட்பாளர்களும் மக்கள் நலனே முதன்மையானது என்ற இலக்கினால் ஒன்றுசேர்ந்து,ஒரு குடைக்குக் கீழ் ஒற்றுமையாய் வடகிழக்கு மக்களின் நலன் கருதி செயலாற்ற முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment