சிறீலங்காவின் புதிய அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவரும் என அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உறுதியளித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிறீலங்கா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் புதிய பிரதமருடன் நேற்று வெள்ளிக்கிழமை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட பான் கீ மூன், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் நல்லாட்சி அணுகுமுறையின் ஓரங்கமாக அமைதியான தேர்தல் நடத்தப்பட்டதை ஐ.நா பொதுச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே நீண்டகால சமாதானத்தை இலங்கைத்தீவில் பேண முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பன் கீ மூன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment