August 13, 2015

மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவ பெருவிழா!(படங்கள் இணைப்பு)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா
பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.இராமாயண காலத்திற்கு முற்பட்ட ஆலயமாகவுள்ள மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமானது இராம பிரான்இஇராவணன் ஆகியோர் வழிபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் தினமும் தம்பபூஜை வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியுலா என்பன நடைபெற்று வருகின்றன.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகேஸ்வத்தின் எட்டாம் நாள் உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை ஸ்தம்ப அபிசேகம் நடைபெற்று வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பஞ்சமுக கணபதிக்கு இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது பஞ்சமுக விநாயகர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட பூஜைகள் நடைபெற்று தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த தேர் திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.நாளை வெள்ளிக்கிழமை காலை ஆலயத்தின் மிக முக்கியத்துவமிக்க உற்சவமான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது
maamaankam-03
maamaankam-05
maamaankam-06

No comments:

Post a Comment