முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது
குடும்பத்தினர் அரசாங்கத்தை கோரவுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மகள் அஜிதா கதிர்காமர் இதனை தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் அரசாங்கத்தை கோரவுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மகள் அஜிதா கதிர்காமர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் மரணம் குறித்து புதியவிசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை தனது குடும்பத்தினர் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தனது தந்தையின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினரின் மனங்களில் விடையில்லாத பல கேள்விகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சகலவற்றிற்கும் விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டுவது இலகுவான விடயம்,அவர்களிற்கு இதில் தொடர்பிருக்கலாம், ஆனால் இது வேறு எவராவது வழங்கிய உத்தரவின் பேரில் இடம்பெற்றிருக்கலாம்,கடந்த தசாப்தத்தில் இடம்பெற்ற பல சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறாதது போன்று இது குறித்தும் விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார் மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களது பூர்வீக நிலத்தை முன்னைய ஆட்சியாளர்கள் தங்கள்வசப்படுத்தியிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
சட்டபூர்வ உரிமை குறித்த ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்ற நிலையில் அது கதிர்காமர் குடும்பத்தின் சொத்து என தாங்கள் அறிந்திருக்கவில்லை என எப்படி அவர்கள் குறிப்பிட முடியும்,எங்களிற்கு சொந்தமான நிலம் தற்போது ஜனாதிபதி மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment