August 27, 2015

ஜங்கரநேசன், டெனீஸ்வரனிற்கும் ஆப்பு?

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் தொடர்ச்சியாக கட்சியின் வெற்றிக்கு பாடுபடாதவர்களை களையெடுக்க கூட்டமைப்பு உயர்மட்டங்கள் முற்பட்டுள்ளன.அவ்வகையினில் வடமாகாண அமைச்சர்
பொ.ஜங்கரநேசனும் பதவியிறக்கப்படலாமென நம்பப்படுகின்றது.

நடந்து முடிந்த தேர்தலில் பெர்து மேடைகள் எதிலுமே ஏறி பிரச்சார நடவடிக்கைகளினில் அமைச்சர் ஜங்கரநேசன் ஈடுபட்டிருக்கவில்லை.
சிறீதரனிற்கு மட்டும் ஆதரவு வழங்கி கருத்துக்களினை வெளியிட்டிருந்தார்.தனக்கு ஆதரவு வழங்காதவர்களை அரசியல் ரீதியினில் பழிவாங்க சுமந்திரன் முற்பட்டுள்ள நிலையினில் ஜங்கரநேசனிற்கெதிராக தனது எடுபிடிகளான சுகிர்தன்,சயந்தன் மற்றும் ஆனோல்ட் தரப்புக்களினை உசுப்பிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜங்கரநேசன் பதவியிறக்கப்பட்டால் ஏற்படும் வெற்றிடத்திற்கு சுழற்சி முறையினில் அமைச்சு பதவி வழங்கப்படுமென உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.ஏற்கனவே முதலமைச்சரிற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள இக்கும்பல் தற்போது அமைச்சர் ஜங்கரநேசனிற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இதனிடையே தேர்தல் தோல்வி காரணமாக குழப்பமுற்றிருக்கும் டெலோ தலைமையும் அமைச்சரான டெனீஸ்வரனை பதவியிறக்க முடிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

டெலோ சார்பினில் எந்தவொரு பிரச்சாரங்களினிலும் டெனீஸ்வரன் ஈடுபடாமை கட்சித்தலைமையிடையெ சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.ஆனால் அந்த பதவி யாருக்கு வழங்கப்படுமென்பது பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை

No comments:

Post a Comment