வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் மூங்கில் செய்கை வைபக ரீதியாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன் அவர்களினால் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்தியாக்கம்பனியின் ராமசுப்பிரமணியம் அவர்களினால் இத் திட்டம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு கிராமசேவக பிரிவில் விண்ணாங்கபிட்டி கிராமத்தில் இப் பயிர்ச்செய்கை வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன் அவர்களினால் கடந்த 21.08.2015 அன்று வைபக ரீதியாக இச் செய்கையினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இச் செய்கைக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களிடம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இப் பயிற்செய்கை நெடுங்கேணிப்பகுதியில் செய்வதற்கு இடத்தினை தெரிவு செய்து இத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இப் பயிர்செய்கையிலிருந்து ஒரு ஏக்கருக்கு 150000 முதல்கட்டம் வருமானத்தினை ஈட்டமுடியும். அந்த வகையில் மூங்கில் மரத்தின் கிளையிலிருந்து சேதனப்பசளை காளான் மண்புழு போன்றவற்றையும் உற்பத்தி செய்து ஏனைய பயிங்செய்கைகளுக்கு பசளையாக வழங்குவதற்கும் மூங்கில் செய்கை இப்பிரதேசம் விவசாய கிராமமாக இருப்பதனால் விவசாயிகள் இச் செய்கையினை இப் பிரதேசத்துக்கு உகந்ததாக கருதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment