August 13, 2015

ஓகஸ்ட 17 மீண்டும் வருகின்றதாம் போலிப் பத்திரிகை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று மீண்டும் இரண்டு பத்திரிகைகளை விடுவிக்க கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையினில் இரண்டு இதழ்களை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவருது நிறுவனம் வெளியிட்டிருந்தது.எனினும் அதற்கு தாம் பொறுப்பில்லையென ஊடக நிறுவனம் தெரிவித்திருந்தது.

அப்போது தேர்தல் களத்திலிருந்த அனந்தி சசிதரனினை தோல்வியுறச்செய்வதற்காக அப்பத்திரிகை வெளியிடப்பட்டிருந்தது.அத்துடன் டாண் எனப்படும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரினை செயலாளர் கோத்தாவின் தொலைக்காட்சி அதனை பரப்புரை செய்திருந்தது.

எனினும் குறித்த நாளிதழ் நிறுவனமே மற்றைய பத்தரிகையினையும் அச்சிட்டு வெளியிட்டிருந்தமை அறியக்கிடைத்துள்ளதாக அண்மையினில் அனந்தி அறிவித்திருந்தார்.

இந்நிலையினில் தற்போது மீண்டும் வாக்களிப்பு தினத்தன்று போலிப்பத்திரிகையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான வாக்களிப்பினை குழப்ப முயற்சிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.தற்போது வேட்பாளராக உள்ள ஒருவரே இம்முயற்சியினில் ஈடுபட்டடிருப்பதாகவும் அதற்காக தனியார் அச்சகமொன்றின் உதவியை நாடியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே தேர்தலை முன்னிட்டு காளான்கள் போன்று சில இலவச பத்திரிகைகள் யாழினில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment