திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் மணிக்கூட்டு கோபுரம் சந்திப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து இந்த போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டை போன்று இந்த வாக்குச்சீ்ட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக காவற்துறையினர் கூறியுள்ளார்.
14 ஆயிரத்து 986 போலி வாக்குச்சீட்டுகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குறித்த கடையை வாடகைக்கு பெற்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து கந்தளாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment