May 20, 2015

டென்மார்கில் Grindsted நகரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 6ம்ஆண்டின் நினைவு கூரல்!(படங்கள் இணைப்பு)

Grindsted நகரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 6ம்ஆண்டின் நினைவு கூரல்
இலங்கையின் சிங்கள இனவாத அரசின் 60 ஆண்டுக்கு மேலான தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நிகழ்வான மே18 2009 எம் நெஞ்சங்களில் கறை படிந்த
நாட்களாகும். முள்ளிவாய்க்காலில் சிங்கள பௌத்த இனவாத அரசினால் எம் மக்கள் மீது உலக நாடுகளின் அனுசரணையுடன் உலக போர் விதிகளை மீறி கொத்துக் குண்டகளையும், இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒன்றரைலட்சத்துக்கு மேற்பட்ட எம் உறவுகளை கொன்றொழித்தது.
இன்நாளை நினைவு கூறும் முகமாக Billund நகரசபை தமிழ்மக்களால் Grindsted தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(17.05.2015) அன்று வணபிதா ஈகிள் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பொதுச்சுடரை வணபிதா ஈகிள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தேவாலய முறைப்படி ஆத்மசாந்திப் பிராத்தனையும், இளையோரின் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து பிராத்தனையில் கலந்துகொண்ட பொதுமக்களால் அகவணக்கத்துடன் , மலர்வணக்கமும் இடம் பெற்றது.












No comments:

Post a Comment