May 17, 2015

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு .(படங்கள் இணைப்பு)

சிங்கள அரசினால் முள்ளிவாய்காலில் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற மே 18ம் நாளாகிய முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது . இப் பேரழிவில் வீரச்சாவை
தழுவிய மாவீர்களையும், படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து மே 16ம் நாளாகிய சனிக்கிழமை டென்மார்க்கில் Randes, நகரத்தில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் பொதுச்சுடர்,தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகின. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிகளுக்கு ஈகசுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து துயர்தாங்கி வந்த மக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் தம் உறவுகளுக்காகவும் மலர்தூவி சுடர் ஏற்றினார்கள் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து தமிழீழகானங்கள் இசைக்கப்பட்டன.


நிகழ்வில் உணர்வுபூர்வமான கவிதைகள் எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. இளையசமூகத்தினர் மே18 இல் நடந்ததை வெளிக்காட்டும் நாடகங்களை வழங்கினார்கள். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு தமிழர்களாகிய நாம். ஒற்றுமையாக எமது அடையாளத்தை என்றும் இழக்கமாட்டோம் எனும் உறுதியேற்று நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவேறின.
















No comments:

Post a Comment