ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.சிறிலங்கா அதிபர் செயலக வாகனங்களை
தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்தார்.
கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக இருந்த சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக இருந்த சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment