May 19, 2015

உயிரிழந்த பொது மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி - விஜ­ய­கலா உறுதி!

இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த பொது மக்­களின் நினை­வாக முள்­ளி­வாய்க்­காலில் நினைவுத்தூபி அமைப்­ப­தற்கு அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யுடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மகளிர் விவ­கார பிரதி அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.
இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட எமது மக்­க­ளுக்­காக அஞ்­சலி செய்­வ­தற்கு கிடைத்த நல்ல சந்­தர்ப்பம் இந்­நா­ளாகும் என்றும் அவர் கூறினார். முள்­ளி­வாய்க்கால் கிழக்கு அ.த.க. பாட­சாலை மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற வட மாக­ாணத்தின் பிர­தான நினை­வேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,
முள்­ளி­வாய்க்­காலில் இறந்த எமது மக்­க­ளுக்­கான அஞ்­ச­லியை ஈகச் சுட­ரேற்றி செலுத்­தி­யுள்ளோம். எமது மக்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். எந்­த­வி­த­மான கார­ணங்­க­ளு­மின்றி கொலை­செய்­யப்­பட்ட மக்களுக்காக அஞ்சலி செலு த்துவதற்குக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமே இந்நாளாகும் என்றார்.

No comments:

Post a Comment