May 20, 2015

தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஐரோப்பியப் பாராளுமன்ற முன்னலில் இரண்டாம் நாளாகத் தொடருகின்ற கவனயீர்ப்புப் போராட்டம். (படங்கள் இணைப்பு)

இன்று காலை 07.00 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கிய கவனயீர்ப்புப் போராட்டம் சீரற்ற காலநிலை மத்தியிலும் மிகவும் எழுச்சியுடன் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
இன்றும் பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேச ஊடகங்களும் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். எமது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள், சிறீலங்கா அரசு நடாத்திய தமிழினப்படுகொலையின் ஆவணப்புகைப்படங்களைப் பார்த்து சிங்கள பேரினவாதத்தின் கொடூர முகத்தை அறிந்துகொண்டனர். அனைத்துலக விசாரணையை விரைவுபடுத்தி தமிழ் மக்களுக்கான நீதியை ஐரோப்பிய ஒன்றியம் பெற்றுத்தர தாமும் உதவுவதாகத் தெரிவித்திருந்தனர்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தது







No comments:

Post a Comment