May 11, 2015

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைகாட்சி அடாவடி இயக்குநருக்கு பிடியாணை!


யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் டண்டணக்கா தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. 

கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக டாண் தொலைக்காட்சி ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார்.

இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவை பங்காளராக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் இத்தொலைக்காட்சி தனது மாதந்த கேபிள் இணைப்பு மூலம் பெறப்படும் வருமானத்தின் பெரும்பங்கை கோத்தபாயவிற்கு தொடர்ந்தும் வழங்கிவருவதாக கூறப்படுகின்றது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதன் மூலம் மஹிந்தவை வெல்ல வைக்க முன்னாள் ஆளுநர் சந்திரசிறி தலைமையினில் நடந்த சதி முயற்சியை அடுத்து தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக தொலைக்காட்சி ஒளி பரப்பியிருந்தது.அதற்கென நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் என்பவரிற்கு 70 இலட்சம் வரை வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளினில் அம்பலமாகியிருந்ததாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment