May 11, 2015

மாவீரர் குடும்ப தகவல்களிற்கு என்ன நடந்தது?

பெரும்பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட  முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களது தகவல் திரட்டு கிடப்பினில் போடப்பட்டுவிட்டதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


வடமாகாணசபையின் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் குறித்த தகவல்களை தனது அமைச்சினூடாக திரட்டுவதாக அறிவித்ததுடன் அதற்குரிய விண்ணப்ப படிவங்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும் இவ்வறிவித்தல்களை நம்பி பெருமளவினில் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தகவல்களை பதிவு செய்திருந்தனர்.

எனினும் தமது படிவங்களிற்கு பின்னராக என்ன நடந்ததென்பதை தாம் அறிந்திருக்கவில்லையென அவர்கள் குற்றச்சாட்டுக்களினை எழுப்ப தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது வருடத்தை அண்மித்துள்ள போதும் யுத்த அவலத்துடன் வாழும் மக்களிற்கு ஒரு துரும்பினை தானும் செய்திருக்கவில்லை.இதனால் மக்கள் கடும் சீற்றமடைந்திருக்கின்ற நிலையினில் நம்பிக்கையூட்டி திரட்டப்பட்ட தகவல்களிற்கு என்ன நடந்ததென அவர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment