முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசா
லை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வாரத்தில் கோத்தபாய கைதாகலாமென இந்த வாரத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அதனை உறுதி செய்யும்விதமாக அவர் திங்கள்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். எவன்கார்ட் விவகாரமே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில், இந்த விடயம் பற்றி திங்கள் கிழமை விசாரணையில் கேள்விகள் கேட்கப்படாதென தெரிகிறது. இதனால் கைது விவகாரத்தை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.
No comments:
Post a Comment