April 20, 2015

ரயிலில் தலை துண்டானது.!

கோவையில் வருவாய் அதிகாரி ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில் டி.எப்.ஓ காம்பவுண்டில் உள்ள அரசு ஊழியர்
குடியிருப்பில் வசித்து வந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் கோவை அருகே கிணத்துக்கடவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார்.
தட்சிணாமூர்த்தி அதிகாலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்வார். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு எழுந்த அவர் மனைவியிடம் “வாக்கிங்” செல்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார்.
ஆனால் அவர் வாக்கிங் செல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். கோவை ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 6 ஆவது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் ஜனசதாப்தி ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
பிளாட்பாரத்தின் மறுபுறத்தில் தட்சிணாமூர்த்தி ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார். பயணிகளை ஏற்றிக்கொண்டு 7.10 மணிக்கு ஜனசதாப்தி ரயில் தனது பயணத்தை தொடங்கியது. மறுவினாடியே தட்சிணாமூர்த்தி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துவிட்டார். கண் இமைக்கும் நேரத்துக்குள் ரயில் அவரது கழுத்தில் ஏறி இறங்கியது.
இதில் தட்சிணாமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்ததும் கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தம், சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தட்சிணாமூர்த்தியின் உடலைக் கைப்பற்றினர்.
கணவர் தற்கொலை பற்றி அறிந்த கவிதாவும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு தட்சிணாமூர்த்தியின் உடலைப் பார்த்து கதறி துடித்தனர். அப்போது கவிதா “கடனைத்தான் அடைத்து விடாலம் என்று கூறினேனே அதற்குள் இப்படி செய்து விட்டீர்களே” என்று அழுது புரண்டது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கச்செய்தது.
இவர்களுக்கு குருபிரசாத், தனயந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஆகும். தட்சிணாமூர்த்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனது தங்கை கணவர் கண்ணனுடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
இந்த வர்த்தகம் அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தட்சிணாமூர்த்தி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அடிக்கடி தனது மனைவியிடம் “ஆன்லைன் வர்த்தகம் நம்மை இப்படி அதலபாதாளத்தில் தள்ளி விட்டதே” என்று கூறுவார்.
நஷ்டத்தை சமாளித்துக் கொள்ளலாம் என்று கவிதா ஆறுதல் கூறி வந்தார். இருப்பினும் மனைவியின் சமாதானத்தை தட்சிணாமூர்ததியின் மனம் ஏற்கவில்லை.


சில நாட்களாக ஆதீத மன உளைச்சலில் உள்ள அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.Suicide-revenue

No comments:

Post a Comment