April 20, 2015

மஹிந்தவை அழைத்தால் என்ன பிழை? ரணில்!

மகிந்தவிடம் விசாரணை!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக அவர் எதிர்வரும் 24 திகதி அழைக்க பட்டுள்ளார். அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட இதனை தெரிவித்துள்ளார். மகிந்த மேற்கொண்ட ஊழ்ல்கள் குறித்த முறைப்பாட்டின்
அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

மஹிந்தவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை? � ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தீர்மானம் சுயாதீனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடி;ககைகளில் அரசங்கம் தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஏதெனும் பிரச்சினை இருந்தால் முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment