ஜேர்மன்விங்ஸ் விமானவிபத்தில் பரபரப்பான திருப்பம். வேண்டுமென்றே விமானத்தை நொருங்கச் செய்த துணை விமானி?
ரொறொன்ரோ- ஜெர்மன்விங்ஸ் விபத்தற்குள்ளாகியது சம்பந்தமாக கடைசியாக
கிடைத்த தகவலின் பிரகாரம் விமானத்தின் துணை விமானி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர் பூட்டியிருந்த விமானம் ஓட்டி உட்காரும் அறையின் கதவை திறக்கவும் மறுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைக்கு மேல் விமானம் ஒன்று சிதறி அதற்குள் இருந்த 150-பயணிகளில் எவரையும் உயிர்பிழைக்க விடாது பலிகொண்ட விபத்தில் நம்பமுடியாத திகில் செய்தி வெளிவந்துள்ளது.
விமானத்தின் துணை-விமானி தலைமை விமானியை அவரது அறையில் இருந்து வெளிப்படையாக வெளியேற்றிவிட்டு விமானம் நொருங்குவதற்கு காரணமாக இருந்துள்ளார் என பிரான்ஸ் வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 4U92595 என்ற விமானத்தின் துணை-விமானியான 28-வயதுடைய அன்ட்றியாஸ் லுபிற்ஸ் விமானத்தை அழிக்க விரும்பினார் என தெரியவந்துள்ளது.
தலைமை – விமானி கழிவறையை உபயோகிக்க சென்றபோது துணை-விமானி விமான ஒட்டியின் அறைக்குள் தனியாக இருந்துள்ளார். அறைக்குள் இவரது கட்டுப்பாட்டிற்குள் விமானம் இருந்த போது ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அறை முழுமையான அமைதியில் இருந்தது என அறைக்குள் இருந்த குரல் பதிவாக்கி காட்டியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதெனவும் வழக்கறிஞர் றொபின் தெரிவித்துள்ளார்.
திரும்பி வந்த தலைமை – விமானி அறைக்குள் நுழைய முயன்றுள்ளார் ஆனால் அவரால் நுழைய முடியவில்லை. விமானி மீண்டும் அறைக்குள் நுழைவதற்காக தட்டியபோதும் அழைத்த போதும் துணை-விமானியிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. விமானத்தை விழுத்துவதற்கான மோசடியை செய்ய விமான கண்காணிப்பு முறையை கையாண்டு கொண்டிருந்துள்ளார் லுபிற்ஸ் ஒரு பட்டனை அமத்தியுள்ளார்.
அது விமானத்தை சரித்துள்ளது. விமானம் ஆயிரக்கணக்கான மீற்றர்கள் வீழ்ச்சியடைந்து தரையில் மோதியுள்ளது. விமானத்தின் இறுதி நிமிடங்களில் நிலப்பரப்பு எச்சரிக்கை அலாரங்கள் ஒலி மற்றும் இடிக்கும் சத்தம் காக்பிட் அறையின் கதவில் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுபிற்ஸ் குறித்த தனிப்பட்ட விபரங்கள் வெளியிட மறுக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அதிகாரிகள் இவரை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
No comments:
Post a Comment