March 26, 2015

திருமணமான தனது காதலனுக்கு தந்தையிடம் இருந்து திருடி பணம் கொடுத்த யாழ்ப்பாண மாணவி!

தன்னைக் காதலிப்பவன் திருமணமானவர் என அப்பட்டமாகத் தெரிந்தும் அவனுக்கு பெருமள வு பண, பொருள் உதவி புரிந்திருக்கின்றாள் உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த உயர் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவி.
பிரபல கட்டட ஒப்பந்தகாரரான தந்தையிடம் பல்வேறு தேவவைகளுக்காக எனப் பணம் பெற்றுள்ளதுடன் தனது வெளிநாட்டு அண்ணனிடமும் தனது
வங்கிக் கணக்கில் பணம் அனுப்பும் படி தெரிவித்து குறைந்தது 5 இலட்சத்திற்கு மேல் பெற்று திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான 27 வயது நபருக்கு பணத்தைக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
தந்தையிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய இரகசியத் தகவல் மூலம் மகளின் திருவிளையாடலை தந்தை அறிந்துள்ளார். இதன் பின்னர் குறித்த நபரை தனது அடியாட்கள் மூலம் அழைத்து தனது இடத்திற்கு கொண்டு வந்து நையப்புடைத்தள்ளார் தந்தை.
தந்தை தாக்குதல் நடாத்தும் போது குறித்த மாணவி கைகளை பிளேற்றினால் வெட்டியதாகவும் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவருகின்றது. அயலவர்கள் அனைவரும் திரண்டு சென்று மகளின் காதலனை தாக்குவதை தடுத்து நிறுத்தி அவனது மனைவியை வரவழைத்து புத்திமதிகள் தெரிவி்த்துள்ளனர்.
இதே வேளை தான் அந்த நபரைக் காதலிக்கவில்லை எனவும் அவனுடன் நட்பாக பழகியதாகவும் மாணவி தந்தைக்கு தெரிவித்தள்ளார். அத்துடன் அங்கு வந்த நபரின் மனைவியும் குறித்த மாணவி தங்கள் வீ்ட்டுக்கு வருவதாகவும் தாம் நட்பாகவே பழகியதகவும்  மனைவி தெரிவித்தார்.

மாணவியுடன் நட்பாக பழகிய நபர் இசைக் குழு ஒன்றின் பாடகர் எனவும் அத்துடன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர் எனவும் தெரியவருன்றது.

No comments:

Post a Comment