March 15, 2015

பலாலி ஓடுபாதையில் இராட்சதப் பறவை (படங்கள் இணைப்பு)

இலங்கையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்
பயணங்களுக்காக இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்தாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமரின் இலங்கை பயணத்தின் போது இந்திய விமானப்படையின் மூன்று எம்.ஐ.8 உலங்கு வானூர்திகளே பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே, இந்திய விமானங்களைப் பயன்படுத்தவும், அவரது பாதுகாப்புக்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோடியின் குழுவில் அடங்கியிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அவர் மோடியுடன் எல்லா இடங்களுக்கும் சென்றதுடன், பேச்சுக்களிலும் பங்கேற்றிருந்தார்.

மோடி உலங்குவானூர்திகளில் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கும், அங்கிருந்து தலைமன்னாருக்கும், அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும் பயணத்தை மேற்கொண்டிருந்தார். எனினும் இந்தியப் பிரதமர், யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலிக்கு இந்திய விமானப்படையின் சி-130 இராட்சத போக்குவரத்து விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
Plane Modi 01
அவ்விமானத்திலேயே கொழும்பு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் பயணத்தை, “பலாலி ஓடுபாதையில் இராட்சதப் பறவை“ என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Plane Modi
Plane Modi 02

No comments:

Post a Comment