March 18, 2015

எங்கள் நிலம் வேண்டும் இராணுவமே வெளியேறு: கவனத்தை ஈர்த்த புதுக்குடியிருப்பு மக்களின் நிலப் போராட்டம்!

எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்கள் மண்ணிலிருந்து இராணுவமே வெளியேறு என்று மக்கள் முழக்கங்களுடன் புதுக்குடியிருப்பில் நேற்று நடத்திய போராட்டம் இராணுவத்தினரை நிலை குலையச் செய்தது. இந்தப் போராட்டத்தில் மக்கள் இராணுவமுகாமையும் சுற்றிவளைத்தனர்.



புதுக்குடியிருப்பில் இராணுவப் படையணி முகாம் ஒன்று மக்களின் காணிகளில் அபகரித்து அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த முகாமை விரிவுபடுத்த மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பொருட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு அதிகாரி புதுக்குடியிருப்புக்கு வருகை தந்திருந்தார். இந் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்று முழக்கமிட்ட மக்கள் இராணுவமுகாமை சுற்றிவளைத்தபோது இராணுவத்தினர் நிலைகுலைந்ததாக எமது செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். இராணுவமுகாமின் செயற்பாடுகள் பாதித்திருந்தன. எங்கள் நிலம் வேண்டும் இராணுவமே வெளியேறு: கவனத்தை ஈர்த்த புதுக்குடியிருப்பு மக்களின் நிலப் போராட்டம்:

இராணுவத்தினர் முகாமைவிட்டு வெவளியில் வர முடியாத நிலையில் இருந்தனர். சிங்கள இனவாத அரசே எமது மண்ணைவிட்டு இராணுவத்தைவெளியேற்று என மக்கள் உக்கிரமாக குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வன்னியில் இராணுவமுகாங்களுக்காக காணிகள் சுவீகரிக்கும் நடவடிக்கைள் சத்தமின்றி முன்னெடுக்கப்படுவது தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே இராணுவம் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகளை இராணுவத்தினர் நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுடன் புதிதாகவும் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மக்களின் இந்தப் போராட்டத்தில் காணி சுவீரித்தல் நடவடிக்கை முடக்கும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி யுத்தம் நடைபெற்ற இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இராணுவமுகாங்களும் இராணுவத்தின் வர்த்தக நீலையங்கள் என இராணுவமயம் அதிகரித்திருந்த நிலையில் மேலும் பல படங்களை அபகரிக்க திட்டமிடப்பட்டுள்ள விடயம் மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதராதலிங்கம் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கவே இவ்வாறு இராணுவத்தினர் திட்டமிட்ட அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட தமிழ் இன விரோத செயல்களை கண்டித்தே மகிந்தவை தோற்கடித்து மைத்திரிபாலவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி இந்த அரசும் இதை தொடராமல் ஜனாதிபதி மைத்திரிபால தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.

இங்கு பேசிய மக்கள் தாம் காலம் காலமாக வாழ்ந்து வந்த மண்ணை இராணுவத்தினர் அபகரிக்க விட முடியாது என்று தெரிவித்ததுடன் தமது நிலத்தை மீட்கும் போராட்டம் தொடர்ந்தும் உக்கிரமாக நடைபெறும் என்று தெரிவித்தனர்.

கண்ணீர் விட்டு கதறியழுத புதுக்குடியிருப்பு நில அபகரிப்புக்கு எதிரான மக்களின் போராட்டம் ஒரு எழுச்சி மிக்க போராட்டமாகவும் அமைந்தது. வாழும் நிலத்தை  இழக்க முடியாது என உரைத்த இந்தப் போராட்டத்தில் காணிகளுக்குச் சொந்தக்காரர்களுடன் பிரதேச மக்கள் பலரும் ஒன்றிணைந்திருந்தனர். 

No comments:

Post a Comment