March 18, 2015

தமிழ்த் தந்தைக்கு எங்களது கண்ணீர் வணக்கம் - யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு!

புலம்பெயர் தமிழர் எங்கள் போற்றுதற்குரிய தந்தை
தமிழ் நிலம் பலம் பெறவே, நன்றே தமிழ் உணர்வூட்டும் அன்னை
களம்பல வென்ற தேசியத் தலைவனின் வாழ்த்துப் பெற்ற
உலகப் பெரும் தமிழ்த் தந்தையே எங்கே சென்றீர்!
அடுப்பினில் விறகாய் வேகும் பெண்களை விழிக்க வைத்தே

தமிழ் இருப்பினை புலத்தில் காக்க ஆசிரியப் பணிகள் தந்தீர்
பெற்றவரான எம்மை பெருமைபெற வைத்த ஆசான்
நற்றமிழ் வளர்த்த நாகலிங்கப் பெரும்தகையே எங்கு சென்றீர்!
அன்னையும் தந்தையுமாகி, அரும் பெரும் ஆசானாகி
அன்னிய மண்ணில் அன்னைத் தமிழாலே எமைக் காத்த செம்மல்
அன்னையைத் தவிக்க விட்டே நீழ்துயிலில் ஆழ்ந்ததேனோ
தேற்றுவோர் இன்றித் தமிழ் ஆலயங்கள் தவிக்குதையா
பிறப்புருவாகும் போதே இறப்பதும் உறுதிகொள்ளும்
சிறப்பெதுவென்றால் வாழ்வில் நிலைத்திடும் புகழ் ஒன்றேயாம்.
புலத் தமிழது வாழும் காலம் தமிழ் தந்தையே உம் நாமம் வாழும்
இறையடி சேர்ந்த ஈழத் தந்தையே சாந்தி..சாந்தி..சாந்தி…
தமிழாலயத் தந்தை அவர்களின் ஆத்மா இறையருள் பெறப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்க் கல்விக் கழகம், தமிழாலயங்கள், ஆகியவற்றின் செயற்பாட்டாளர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள், அனைவர்க்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                         தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ்ப் பெண்கள் அமைப்பு - யேர்மனி



No comments:

Post a Comment