யாழ்ப்பாணம், தாவடி பகுதியிலுள்ள கடையொன்றின் களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தால் களஞ்சியசாலையிலிருந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
இந்த தீ விபத்துக்கு காரணமான, களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள குப்பைகளை எரித்த அயல்வீட்டுக்காரரை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் இன்று அனுமதி வழங்கினார்.
குறித்த கடைக்கு அருகில் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர், குப்பைகளைக் கூட்டி அதற்கு நெருப்பு வைத்துள்ளார். குப்பைக்குள் இருந்த தணல் களஞ்சியசாலைக்குள் வீழ்ந்து தீப்பிடித்துள்ளது.
மேற்படி குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், பாதுகாப்பற்ற முறையில் குப்பை கொழுத்திய குற்றச்சாட்டில் அயல் வீட்டுக்காரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment