March 26, 2015

வடமாகாண தொண்டர் ஆசிரியர் விவகாரம்தலையிடியாகின்றது !

வடமாகாணசத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் வவிகாரம் கல்வி அமைச்சிற்கு தலையிடி தருவதாக மாறிவருகின்றது. தொண்டர் ஆசிரியர்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டாமென கோரி வருகின்ற போதும் அரசியல் பின்னணியில் அவர்கள்
தொடர்ந்தும் பணியாற்றியே வருகின்றனர். அத்துடன் அவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரியும் வருகின்றனர்.
அவ்வகையில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது சுமார் 350 தொண்டர் ஆசிரியர்கள் தற்காலிகமாக சேவையில் உள்ளனர். அனைவருக்குமான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகின்றது.
எனினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மத்திய அரசுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். வடமாகாணத்தில் அதிகளவான தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். விரைவில் சாதகமான பதிலைப் பெற்றுத்தருவோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment