இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலியா பிரஜையான தமிழரின் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
போதைப் பொருட்களை கடத்தியமைக்காக மயூரன் சுகுமாரன் என்ற அவர் உள்ளிட்ட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அடுத்த மாதம் அளவில் அவர்கள் ஒன்பது பேரும் அந்த நாட்டின் சட்டத்தின் கீழ் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரை மீட்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போதும், அது கைகூடியிருக்கவில்லை.
இந்த நிலையில் அவரை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்பான காரணங்கள் அடங்கிய ஆவணங்களை, அவரது சட்டத்தரணி இந்தோனேசிய நீதிமன்றம் முன்வைத்துள்ளார்.
இதனை அடுத்து இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment