பாடசாலை மாணவர்களது குடிநீரினில் நஞ்சுகலந்த நபர்களை கைது
செய்யவலியுறுத்தியும் பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கக்கோரியும் சுன்னாகத்தினில் கண்டன ஊர்வலமொன்றினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் ஏழாலை மயிலங்காடு சிறீமுருகன் பாடசாலை மாணவர்களது குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 26 மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அச்சங்காரணமாக பாடசாலை இழுத்து மூடப்பட்டுமுள்ளது. இன்றைய தினமும் மாணவர்கள் போதிய அளவில் சமூகமளித்திருக்கவில்லை.
சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர் வீதி மறியல் போராட்டமொன்றை நேற்று நண்பகல் செய்திருந்தனர்.
இந்நிலையினில் இரண்டாம் நாளாக இன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை சுன்னாகம் நகரப்பகுதியினில் செய்துள்ளனர்.
தாங்கி தண்ணீர் குடிப்பதற்கு அச்சம்,குற்றவாளிகளை கைது செய் போன்ற சுலோக அட்டைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
குறித்த பாடசாலையின் கிணறு சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய கழிவு ஓயில் கலந்தமையினால் கடந்த மூன்று மாதங்களாக பயன்படுத்தப்படாதேயுள்ளது. இதையடுத்து சுன்னாகம் பிரதேசசபையே குடிநீரை விநியோகித்து வந்திருந்தது.
எனினும் கல்வி அமைச்சோ போதிய அளவு குடிநீர் தாங்கிகளை வழங்காது அக்கறையற்றிருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அத்துடன் பாடசாலை நிர்வாகமும் தண்ணீர் தாங்கியினை பராமரிக்க தவறியுள்ளது.
இதனிடையே வடமாகாண கல்வி அமைச்சர் மத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்ட ஒஸ்மானியாக்கல்லூரி நிகழ்வில் இன்று பங்கெடுத்திருந்தார்.

No comments:
Post a Comment