March 18, 2015

கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும், ராதிகா சிற்சபைஈசனும் அடுத்த தேர்தலில்?.

கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் வெகுவிரைவில் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மற்றயைதொரு கட்சி அது தொடர்பான நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்று தெரியவருகின்றது

குறிப்பாக அண்மையில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒரு தொகுதியில் இடம்பெற்ற வேட்பாளர் தேர்வில் மூன்று தமிழர்களும், தமிழ் பேசும் ஆங்கிலோ இந்தியர் ஒருவரும் தங்களை வேட்பாளராக முன்னிறுத்த முயன்ற போதும் அந்த வேட்பு மனுக்கள் தகுதிகாண் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தன.
ரொறன்ரோ காவல்துறையில் பணியாற்றும் ஒரு தமிழர் பெரிய பிரச்சார முன்னெடுப்புக்களுடன் இத்தொகுதியில் களமிறக்கப்பட்ட போதும் கட்சியின் வரையறைகளை, அல்லது அதுசார்ந்த விருப்புக்களை வேட்பாளர் தகுதித்தன்மைகளைப் பிரதிபலிக்காத காரணத்தால் அவ்விண்ணப்பமும் வெற்றி பெறவில்லை என்றே கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நான்கு தமிழ் மொழி பேசும் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியாமல் போனது குறித்து கருத்துத் தெரிவித்த அந்தக் கட்சியின் முன்னைநாள் வேட்பாளர் ஒருவர், இது கட்சிக்கெதிராக தமிழர்களை வாக்களிக்க வைத்துவிடுமோ என்ற பயம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.கருத்துத் தெரிவித்த மேற்படி வேட்பாளரும் நட்சத்திர வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் போட்டியிட்ட தொகுதியில் இம்முறை போட்டியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் அவருக்கு ஏதுவாக அமையவில்லை.
லிபரல் கட்சி சார்பில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு தொகுதியிலும், புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் போட்டியிடும் நிலையில் மற்றைய மூன்று கட்சிகளிலிருந்து வெல்லக்கூடிய தமிழர்கள் எங்கும் போட்டியிடவில்லை என்பது தமிழர்களின் “இனஞ்சார்ந்த” ஒரு அக்கறையாகப் பார்க்கப்படுகின்றது.
இருந்த போதும் பிரதான கட்சியொன்றில் அக்கறையுடன் செயற்படும், திறமையுள்ள எவரும் தாங்கள் வாழும் தொகுதிகளில் போட்டியிடும் போது கட்சி மேற்படி விண்ணப்பங்களை தனது வரையறை, எதிர்பார்ப்புக்களிற்கு ஏற்றதாக இருந்தால் பரிசீலனைக்கு எடுத்து அவர்களை வேட்பாளர் தெரிவுத் தேர்தலில் போட்டியிட வழிசமைக்கும் எனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment