March 20, 2015

உடுப்பிட்டி கலைமகள் சர்வதேச பாடசாலை அலங்கோலங்கள் !

யாழ்ப்பாணத்தில் தற்போது சர்வதேச பாடசாலைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழிமூலத்தில் கல்வி கற்பிக்கும் இப்பாடசாலைகள் ஒழுங்கான முறையில் செயற்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் கலைமகள் சர்வசே பாடசாலை ஒன்று உள்ளது, இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலேயே கல்வி கற்கின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒழுங்காக கல்வி கற்பிக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பாடசாலையில் சில வகுப்புக்களில் 5 பிள்ளைகளுக்கும் குறைவானவர்களே கல்வி கற்பதாகத் தெரியவருகின்றது. அத்துடன் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு எந்தவித ஆங்கில அறிவும் இல்லாமல் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி போதிக்கும் ஆசிரியர் மாணவர்கள் சிலரை ‘தவளை வாயன்’, ‘அப்பளவாயன்’ போன்ற பட்டப் பெயர்களைச் சூட்டி அழைப்பதாகவும் தெரியவருகின்றது, அத்துடன் அப் பாடசாலை அதிபரும் மாணவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசிவருகின்றார்,

3 மாதங்களுக்கு ஒரு முறை இருபது ஆயிரம் ரூபாவை பெற்றோர் கல்விக் கட்டணமாக இறைத்தும் எந்தவித பிரயோசனமும் இல்லை என கதறுகின்றனர்.
அத்துடன் சில பெற்றோர் மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றி வருகின்றனர். பாடசாலை விளையாட்டுப் போட்டி, நிகழ்வுகள் என தெரிவித்தும் காசுகள் கறந்து வருகின்றது குறித்த பாடசாலை.

அத்துடன் பெற்றோர்கள் சந்திப்பு எனத் தெரிவித்து நீண்ட நேரம் காக்க வைத்து பெற்றோர்களை அலக்கழிப்பதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment