பிற்போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை, போரினால் வன்மையாக பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இம்முடிவினை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வன்மையாக க் கண்டிக்கின்றது.
சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் தமிழ் மக்களிற்கு எந்தவொரு தீர்வையும் தரப்போவதில்லை. இவர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது இனப்பிரச்சினை பற்றியோ அல்லது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியோ குரல் கொடுக்கவில்லை. அத்துடன் புதிய சிங்கள ஜனாதிபதியும் ஓர் போர் குற்றவாளி. தமிழின அழிப்பாளன். மேலும் சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள், தமிழ் மக்களிற்கு எதிரான உயிர் அச்சுறுத்தல்களும் மனிதவுரிமை மீறல்களும் தொடர்கின்றன. தமிழ் மக்களின் வாக்குகளே புதிய சிங்கள ஜனாதிபதியின் தேர்விற்கு அடிப்படையாக இருந்தன. இத்தெரிவு இவர் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் மேற்கொள்ளப்பட்டதல்ல. மகிந்த ராஐபக்சவையும் அவரது குடும்பத்தையும் தோற்கடிக்க வேண்டுமென்ற முடிவும், அமெரிக்கா, இந்தியாவினது நட்பு இனம் தமிழினமே என்பதை எடுத்துக்காட்டவுமே இந்நடவடிக்கையாகும்.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் உலக மக்கள் மத்தியில் தனது நம்பகத்தன்மையினை தொடர்ந்து பாதுகாக்கவும் மனிதவுரிமை மீறல்களை வெளிப்படுத்தவும் செயற்பட வேண்டுமென்றும் செப்ரெம்பர் 15 இல் யுத்தக்குற்ற விசாரணை பற்றிய அறிக்கை வெளியிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்
No comments:
Post a Comment