யாழ்ப்பாணம், இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டீ சில்வா, வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.
கடற்கரைக்கு அருகிலுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி பொதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதி சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது.
இந்த கஞ்சா பொதிகள், கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. கஞ்சா பொதிகளை மல்லாகம் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment