பெப்ரவரி 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து 6.00மணிவரை 24,Grosvenor Square, WIA 2LQ என்னும் இடத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் நீதிக்கான போராட்டம் நடாத்தப்பட உள்ளது
.
சிறீலங்கா அரசு தமிழ் இனத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இனஅழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தக் கோரியும் இலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில், சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காமீதான போர்க்குற்ற விசாரணையால் தமிழ்மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் தமிழ்மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் முன்னைய மகிந்த ஆட்சியில் எப்படி தொடர்ந்தனவோ அப்படியே மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் தொடரும் என்பதையும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்ற போலியான தோற்றப்பாட்டைக் கொடுத்து, அதற்கமைய சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்க ஐ நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதையும் தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கப் போவதில்லை என்ற போதும் அதைக்கூட சமர்ப்பிக்காமல் காலந் தாழ்த்துவதன் பின்புலத்தையும் அனைவரும் நன்றாகவே அறிவர். தமிழ் மக்களாகிய நாம் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் எமது மண்ணை மீட்கவும் நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் இம்மாதம் 24 ஆம் நாள் நடைபெற உள்ள நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் இளையோரமைப்பு
தொடர்புகளுக்கு 0203 371 9313

No comments:
Post a Comment