யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தொகுத்த “ஜெனீவா தீர்மானமும் மெய்நிலை அரசியலும்” ஒரு
நோக்கு என்ற புத்தகம் நாளை கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு சிரேஸ்ட சட்டதரணியும் இலங்கை
தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவருமான கே.வி.தவராசா தலைமையில்
இந்த நிகழ்வு இடம்பெறும்.
இதில் விருந்தினர்களாக பா.உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராசா, மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராசசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஆற்றவுள்ளார்.
ஆய்வுரைகளையும் உரைகளையும் ஆய்வாளர் நிலாந்தன், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன், பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கிளிநொச்சி அறிவகம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments:
Post a Comment