February 15, 2015

டென்மார்க் தலைநகரில் தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்!

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளால் துப்பாக்கு சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் கலந்து கொண்ட பொது விவாத நிகழ்ச்சியினை குறிவைத்தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகினார். ஆனால் சுவிடன் கார்டூனிஸ்ட் உயிர்தப்பினர். சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் பேசுகையில், தன்னை அவர்கள் குறிவைத்தனர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்று கூறப்படுகிறது. “இந்த சம்பவங்களால் நான் அதிர்ச்சி அடையவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து சிலமணி நேரங்களில் மற்றொரு பகுதியிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். டென்மார்க் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இரண்டு போலீசார் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜிகாதிகள் கோபன்ஹேகன் நகரிலே தலைமறைவாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். டென்மார்க் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நையாண்டித்தனமாக எழுதுவதில் புகழ்பெற்ற பிரான்சு நாட்டைச் சேர்ந்த வாரப்பத்திரிகை ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது.
பத்திரிக்கை அலுவலக தாக்குதலில் பிரபல கார்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட நபிகள் நாயகம் பற்றிய கேலிச்சித்திரத்தை மறுபிரசுரம் செய்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்தது. ‘சார்லி ஹெப்டோ’ கார்டூனை மறுபிரசுரம் செய்த ஜெர்மன் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும், இதனுடன் தொடர்பு இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Denmark 1Denmark 2Denmark 3Denmark

No comments:

Post a Comment