February 22, 2015

அடிமை நிலை தகர்க்க ஐ.நாவில் ஒன்றுகூடுவோம்!

தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழீழத்தில் வாழும் எமது உறவுகள் சொந்த நாட்டிலே
சிங்களபேரினவாதத்தால் அகதிகளாக> அடிமைகளாக> அவர்களுடைய குரல்கள் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு> கருத்துரிமை மறுக்கப்பட்டு  சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

சிங்கள தேசம் சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இன்று வரை திட்டமிட்ட தமிழின அழிப்பையே தனது குறிக்கோளாக முன்னிருத்தி செயற்பட்டு வருகின்றது என்பதை தமிழ் மக்களாகிய நாம் தெளிவாக உணர வேண்டும். அதன் வெளிப்பாடே முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாகும்.

அன்பான உறவுகளே! இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது மாறாக தமிழர்களின் உரிமையோ அல்லது தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற;கான நிலைமைகளோ இன்னும் உண்டாகவில்லை. ராயபக்ச அரசு தோற்றிருக்கலாம் ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழீழ தனியரசை இன்னும் வெல்லவில்லை. ஆட்சி ஏறியுள்ள புதிய அரசு அமைதியான முறையில் திட்டமிட்ட தமிழின அழிப்பையும் தமிழின அழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரத்தையும் அழிப்பதற்கே முனைகின்றது என்பதே நிதர்சனமான உண்மையாக திகழ்கின்றது.

2009ம் ஆண்டு எமது உறவுகள் கொன்றொழிக்கப்பட்ட பொழுது ஐ.நா. காத்த மௌனமும் தவறுமே சிங்கள பேரினவாதத்தை தமிழின அழிப்பு செய்வதற்கு வலுசேர்த்தது என்பதை எவராலும் மறுக்கவோ அல்லது வரலாற்றிலிருந்து அகற்றவோ முடியாது. முள்ளியவாய்க்காலில் தமிழின அழிப்பு இடம்பெற்று 6 ஆண்டுகள் கடக்கவிருக்கும் நிலையில் திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு உள்ளான தமிழர்களுக்கு ஐ.நா. நேர்மையான நீதியை வழங்காமல் குற்றம் செய்த சிங்கள பேரினவாத்திற்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பது மீண்டும் ஐ.நா விடுகின்ற தவறாகவும் கண்டனத்திற்குரிய செயலாகவும் சிங்கள பேரினவாதம் தமிழின அழிப்பை மேற்கொள்வதற்கும் மேற்கொண்ட தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்குமே வழிவகுக்கும் என்பதை இவ்வறிக்கையூடாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



எதிர்வரும் 16.03.2015 திங்கள் அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது. களமாடி மடிந்த மாவீரர்களினதும் இனவழிப்பிற்கு உள்ளாகப்பட்ட உறவுகளுக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் வரலாறு காணாத மாபெரும் எழுச்சிப் போராட்டமாக இந்த எழுச்சி நிகழ்வு அமையவேண்டும். மேலும் எமது மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் „எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில்> காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.' ஆகையால் அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும் மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment