February 26, 2015

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் எண்திசைக்கும் ஒலிக்கட்டும்- யேர்மன் தமிழ் மக்களுக்கான அழைப்பு

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து  ஜெனீவா நோக்கி செல்லும் விடுதலைச் சுடர் எதிர்வரும் சனிக்கிழமை 28.02.2015 அன்று யேர்மன் நாட்டை வந்தடைய உள்ளது.
யேர்மன் நாட்டில் முதலாவது இடமாக   Münster நகரத்தில் விடுதலைச் சுடர் யேர்மன் தமிழ் மக்களால் ஏந்தப்பட்டு பல்லின சமூதாயத்தை நோக்கி  தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து யேர்மன் நாட்டில் Osnabrück ,Bremen, Hamburg, Berlin, Hannover, Bielefeld, Dortmund, Bochum,Mülheim, Düsseldorf ,Köln, Frankfurt,Stuttgart,Augsburg,München நகரங்களை ஊடறுத்து சுவிஸ் நாட்டை சென்றடைய உள்ளது  .விடுதலைச் சுடர் செல்லும் நகரங்களிலும்,  அண்மைய நகரங்களிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் இப் பயணத்தில் தங்களை இணைத்து தமது தேசிய உணர்வையும் , கடமையையும் செய்ய வேண்டும் என இத் தருணத்தில் அழைப்பு விடுகின்றோம் . தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பார்வையாளர்களாக இல்லாமல் தமது பங்களிப்பையும் செய்யும் வண்ணம் தங்களை தயார்ப்படுத்த வேண்டிய காலத்தின் முக்கியத்துவத்தை உணரவேண்டும். விடுதலைச் சுடர் பயணத்தை யேர்மனியில் வெற்றிகரமாக நடாத்திச்செல்ல மக்களின் மாபெரும் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.


இவ்வண்ணம்
மிழ் ளையோர் மைப்பு - யேர்மனி

No comments:

Post a Comment