தமிழின அழிப்புக்கு நீதி கோரி
ஐநா நோக்கி பயணிக்கும் விடுதலைச் சுடர் இன்றைய நாளில் belgium
நாட்டில் antwerpen நகர தமிழ் மக்கள் ஊடாக தனது
கோரிக்கையை நிலைநிறுத்தி
பல்லின மக்கள் மத்தியில் நீதி கோரியது.
கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட
மக்கள் கடும் குளிரிலும் மழையிலும் வேற்றின மக்களுக்கான விளக்கங்களை
கொடுத்திருந்தார்கள் . தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் பதாதைகளையும்
தாங்கியவண்ணம் , துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
தாயகத்தில் இருந்து அரசியல்
சந்திப்புகளை முன்னெடுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட
மாகாணசபை மக்கள் பிரதிநிதியுமாகிய திரு சிவாஜிலிங்கம் அவர்களும் இவ்
நிகழ்வில் கலந்துகொண்ட இன்றைய சமகால அரசியல் நிலையையும் அத்தோடு தாயக,
தமிழக , புலத்து மக்களின் ஒருமித்த போராட்டத்தின் அவசியத்தையும்
எடுத்துரைத்தார் .
விடுதலைச் சுடர் நாளைய நாளில் நெதர்லாண்ட் நாட்டை சென்றடைய உள்ளது .
No comments:
Post a Comment